The world is rapidly evolving, striving each day for a brighter future. The 21st century has become more people-centric, focusing on socializing and uplifting the underprivileged. In line with this vision, the Lemuriya Foundation was established in 2008 by S. Kumana Rajan, Editor in Chief of ‘The Tamil Lemuriya’ Magazine, as a voluntary organization in Maharashtra.
Registered as a charitable organization under the Mumbai Public Trust Act, 1950, the Lemuriya Foundation adopts a multi-faceted, bottom-up approach. It emphasizes student development, social and economic justice, the empowerment of women and children, and support for the elderly, disabled, and underprivileged.
The Foundation also aims to inspire and appreciate Tamil activists migrating abroad, promoting cultural exchange and awarding Tamil students for preserving the language. It nurtures younger generations through music, art, drama, culture, and literature.
The foundation organizes literary, musical and theatrical events, awards and honours Tamil scholars, provide scholarships to economically disadvantaged students, medical expenses for deserving and differently abled individuals and supports other organisations working for the advancement of Tamil culture.
Beneficiaries of the Foundation include students from Maharashtra, Karnataka and Tamil Nadu, with Mumbai leading in providing food, medical, and educational assistance during crises and disasters. During pandemic periods, the foundation did excellent work throughout Maharashtra and received appreciations from Governor, Chief Minister of Maharashtra and other government bodies. The foundation sent volunteers to Tamil Nadu during natural calamities and supported the affected people with food, medicines and clothes.
With a commitment to humanitarian support and societal empowerment, the Foundation has invested over two crore rupees in welfare and security measures. Those who believe in community service find meaning in impacting multiple lives, a principle the Foundation upholds.
இலெமுரியா அறக்கட்டளை 2008 ஆம் ஆண்டு தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் “தமிழ் நேயர்” சு. குமணராசன் அவர்களால் தொடங்கப் பெற்று 2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓர் தன்னார்வத் தொண்டு நிறுவனமாக மும்பை பொது அறக்கட்டளை விதிகள் 1950ன் கீழ் பதிவு செய்யப் பட்ட நிறுவனமாகும்.
இலெமுரியா அறக்கட்டளை மாணவர்களின் கல்வி வளர்ச்சி, சமுக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்த பிரிவு மக்களுக்கு தொண்டு செய்தல் என பல்முனை நோக்கங்களை முதன்மையாக கொண்டு இயங்கி வரும் அமைப்பாகும்.
வெளிமாநிலங்களில் புலம் பெயர்ந்து தமிழ்ப் பணியாற்றி வரும் ஆர்வலர்களை ஊக்கப் படுத்திப் பாராட்டி விருது வழங்குதல், தமிழ் மாணவர்கள், தாய்மொழிக் கல்வி பெறும் மாணவர்களை ஊக்கமளித்து விருதுகள் அளித்தல், தமிழின மொழி பண்பாட்டுக் கூறுகளை இயல், இசை, நாடகம் வழியாக இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் தமிழப் பணியினையும் செய்து வருகின்றது.
இதுகாறும் மகாராட்டிரா, தமிழ் நாடு உள்ளிட்ட மாணவர்கள் பெரும் பான்மை மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மனித நேய உணர்வுடன் பேரிடர் காலங்களில் வாழ்வாதாரச் சிக்கல் ஏற்படும் மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் கல்வி உதவ அளித்து துணை நிற்பதில் மும்பையின் முன்ணனி அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இது காறும் மக்கள் நலப் பணிகளுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் சற்றொப்ப இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு பணி செய்துள்ளது. இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு நல் உள்ளம் படைத்த மனித நேயப் பற்றாளர்கள் துணை நிற்கின்றனர்.