Appreciation from Honourable Governor of Maharashtra Shri. Bhagat Singh Koshyari

13 Nov 2020 2:37 pm

Appreciation from Honourable Governor of Maharashtra Shri. Bhagat Singh Koshyari Alt

Honourable Governor of Maharashtra Shri. Bhagat Singh Koshyari appreciated our work during Covid-19 and other social works.

மகாராட்டிரா மாநில ஆளுனர் மாண்புமிகு பகத்சிங் கோசியாரி அவர்களின் வாழ்த்துச் செய்தி

இலெமுரியா அறக்கட்டளை கடந்த பத்து (10) ஆண்டுகளாக ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து மனிதவள மேம்பாட்டை விரிவுபடுத்துகிறது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலெமுரியா அறக்கட்டளை உணவு தானியங்கள், அன்றாடத் தேவைகள், உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை வழங்கி மனித நேயத்துடன் மக்களுக்குத் தொண்டாற்றியது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

கல்வி மற்றும் சமுக மேம்பாட்டுத் துறைகளில் பணிகளை மேலும் ஊக்குவிக்க இந்த அறக்கட்டளை முயல்கிறது என்பதையும், இதுவரை 6000 குடும்பங்கள், 450 மாணவர்கள் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் பிற இடங்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அதன் பணிகள் மூலம் உதவியுள்ளதையும் நான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன்.

இலெமுரியா அறக்கட்டளையை, குறிப்பாக அதன் நிருவாக அறங்காவலர் திரு சு.குமணராசன் அவர்களின் பாராட்டத்தக்க பணிகளை நான் வாழ்த்துகிறேன். மேலும் இந்த அறக்கட்டளை அதன் எதிர்கால முயற்சிகளிலும் தொடர்ந்து வெற்றிபெற வேண்டுமென விரும்பி வாழ்த்துகின்றேன்.

இவண்,
(ஒப்பம்)
பகத் சிங் கோசியாரி

நமது அறக்கட்டளைக்கு மாராட்டிரா மாநில ஆளுநர் திரு. பகத்சிங் கோஷ்யரி அவர்களின் வாழ்த்து பற்றி தினத் தந்தியில் வெளியான செய்தி

நாள்: 14- 11 – 2020
பதிப்பு: மும்பை

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives