முத்தொள்ளாயிரம் என்ற இந்த நூல் கால அளவையில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் வகைப் படுத்தியுள்ளனர். எனவே தான் இது செவ்வியல் இலக்கியங்கிளில் ஒன்றாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
இறையனார் களவியல் அல்லது இறையனார் அகப்பொருள் என்னும் நூல் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஓர் அருமையான இலக்கண நூல். இது தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. சற்றொப்ப 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.
ஆசாரக் கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். தமிழில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.
காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும், ஒரு வகை அணிகலக் கோவை ஆகும். பல மணிகள் கோர்த்த காஞ்சியின் மணி போல கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முதுமொழிக் காஞ்சியென்பது அறிவுரைக் கோவையாக அமைகிறது.
நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல் பழமொழி நானூறு. நாலடிப் பாடல்களின் சொற்பொருள்களைப் பல இடங்களில் தழுவிச் செல்வதனால், இது நாலடியாரோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம்.