ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம், நாககேசரம்) சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறும் கலந்தது ஏலாதி சூரணம் எனப்படும். உடலுக்கு மருந்து போல உள்ளத்திற்கு மருந்தாக அமைவது என்று பொருள் படும்.
இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு” என்பது இவ்வேறுபாட்டில் ஒன்று. முன்னது “இன்னிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது. பின்னது “கைந்நிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது.
இந் நூல் ஐந்திணை ஐம்பது போன்றே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என பெயர் பெற்றுள்ளது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஐந்திணை ஐம்பது என ஐம்பது பாடல்கள் கொண்ட நூலை நாம் ஏற்கனவே கடந்த பதிவில் பேசினோம். இன்று ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் அமைந்துள்ள நூலின் பெயர் ஐந்திணை எழுபது என்பதாகும்.
பதினென் கீழ்க் கணக்கு நூல்களில் அகப்பொருள் குறித்து பேசுவன ஆறு நூல்களாகும். அவை (1) கார்நாற்பது (2) ஐந்திணை ஐம்பது (3) திணைமொழி ஐம்பது (4) ஐந்திணை எழுபது (5) திணைமாலை நூற்றைம்பது (6) கைந்நிலை என்பன.