பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 18 களில் 10 நூல்கள் புறம் சார்ந்தும் 6 நூல்கள் அகம் சார்ந்தும், மீதியுள்ள இரண்டு நூல்கள் திருக்குறள், நாலடியார் என்பவை அகம், புறம் சார்ந்தும் உள்ள நூற்களென ஏற்கனவே பதினெண் கீழ்க்கணக்கு அறிமுகப் பதிவில் விளம்பியுள்ளேன்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக இன்று நாம் பார்க்க இருக்கும் இலக்கியம் முதன்மையான ஒன்றாகவும், உலக இலக்கியங்களில் ஒப்பற்ற நூலாகவும் திகழும் திருக்குறள்
தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் இருப்பினும் தொன்மைக் காலத்தில் (அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்) தோன்றிய 41 நூல்களை செவ்வியல் இலக்கியங்களாக வரையறுத்துள்ளனர்
பத்துப் பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் ஆகும்.
ஆற்றுப்படையிலக்கியம் என்பது தமிழ் மொழியில் மட்டும் தான் உள்ளது. வேறு எம்மொழியிலுமில்லை என்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.
பத்துப் பாட்டில் உள்ள மற்றுமொரு அகம் புறம் சார்ந்த இலக்கியம் பட்டினப் பாலை என்ற நூலாகும். இது காதல் துறைப் பற்றி அமைந்த ஓர் கற்பனைப் பாட்டு. இந்த நூலில் காதலர் பிரிவாகிய பாலைத் திணை என்னும் பொருள் பட பல பாடல்கள் அமைந்துள்ளன.