தமிழ்த் துளிகள் - Lemuriya Foundation

துளி – 45 மணிமேகலை

மணிமேகலை தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று.
முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தின் நீட்சியாக அடுத்து எழுதப் பட்ட இரண்டாவது காப்பியம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு கூறுவது சிலப்பதிகாரம்

துளி 44 – சிலப்பதிகாரம்

தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்று அழைக்கப் படுகிற சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு மட்டுமே தமிழ்க் காப்பியங்கள்

துளி – 43 முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் என்ற இந்த நூல் கால அளவையில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் வகைப் படுத்தியுள்ளனர். எனவே தான் இது செவ்வியல் இலக்கியங்கிளில் ஒன்றாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

துளி – 42 இறையனார் அகப்பொருள்

இறையனார் களவியல் அல்லது இறையனார் அகப்பொருள் என்னும் நூல் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஓர் அருமையான இலக்கண நூல். இது தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. சற்றொப்ப 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.

துளி – 41 ஆசாரக் கோவை

ஆசாரக் கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். தமிழில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.

துளி 40 – முதுமொழிக் காஞ்சி

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும், ஒரு வகை அணிகலக் கோவை ஆகும். பல மணிகள் கோர்த்த காஞ்சியின் மணி போல கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முதுமொழிக் காஞ்சியென்பது அறிவுரைக் கோவையாக அமைகிறது.

துளி 39 – பழமொழி நானூறு

நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல் பழமொழி நானூறு. நாலடிப் பாடல்களின் சொற்பொருள்களைப் பல இடங்களில் தழுவிச் செல்வதனால், இது நாலடியாரோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம்.

துளி 38 – திணைமாலை நூற்றைம்பது

திணை என்பது நிலம், ஒழுக்கம் என பல பொருள் படும் ஒரு சொல்லாகும். இங்கே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலம் குறித்தும், அந் நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல், முதலிய ஒழுக்கங்கள் குறித்தும் சிறப்பித்துப் பாடப் பெறுகின்றன.

துளி 37 – திரிகடுகம்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் தொடர்ச்சியாக மூலிகைகளை உவமைகளாகக் கொண்டு ஆறு, ஐந்து, நான்கு என மூன்று இலக்கியங்களை முன்னர் கண்டோம் இன்று நாம் பேசவிருப்பது திரிகடுகம்.

துளி 36 – நான்மணிக்கடிகை

முன்னையப் பதிவுகளில் ஆறு மூலிகைகளுடன் ஏலாதி, ஐந்து மூலிகைகளுடன் சிறுபஞ்ச மூலம் என்ற இலக்கியங்களைத் தொடர்ந்து இன்று பார்க்க இருப்பது நான்மணிக்கடிகை.

துளி 35 – சிறுபஞ்ச மூலம்

சிறுபஞ்சமூலம் மருந்து உடல் நலம் பேணுவது போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறிக்கப்படும் ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. உள்ளத்தை தூய்மைப் படுத்துவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.

துளி 34 – ஏலாதி

ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம், நாககேசரம்) சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறும் கலந்தது ஏலாதி சூரணம் எனப்படும். உடலுக்கு மருந்து போல உள்ளத்திற்கு மருந்தாக அமைவது என்று பொருள் படும்.

துளி 33 – இன்னிலை

இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு” என்பது இவ்வேறுபாட்டில் ஒன்று. முன்னது “இன்னிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது. பின்னது “கைந்நிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது.

துளி 32 – திணைமொழி ஐம்பது

இந் நூல் ஐந்திணை ஐம்பது போன்றே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என பெயர் பெற்றுள்ளது.

துளி 31 – ஐந்திணை எழுபது

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஐந்திணை ஐம்பது என ஐம்பது பாடல்கள் கொண்ட நூலை நாம் ஏற்கனவே கடந்த பதிவில் பேசினோம். இன்று ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் அமைந்துள்ள நூலின் பெயர் ஐந்திணை எழுபது என்பதாகும்.

துளி 30 – ஐந்திணை ஐம்பது

பதினென் கீழ்க் கணக்கு நூல்களில் அகப்பொருள் குறித்து பேசுவன ஆறு நூல்களாகும். அவை (1) கார்நாற்பது (2) ஐந்திணை ஐம்பது (3) திணைமொழி ஐம்பது (4) ஐந்திணை எழுபது (5) திணைமாலை நூற்றைம்பது (6) கைந்நிலை என்பன.

துளி 29 – களவழி நாற்பது

பதினென் கீழ்க் கணக்கு நூற்தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் பற்றிக் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது.

`நாற்பது` என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு எனக் கண்டோம் அவை: 1.கார் நாற்பது, 2. களவழி நாற்பது 3. இன்னாநாற்பது 4. இனியவை நாற்பது என்பனவாம்.

தமிழ் இலக்கியங்கள் – தமிழ்த் தடம் Alt

தமிழ் இலக்கியங்கள் – தமிழ்த் தடம்

இலெமுரியா அறக்கட்டளையின் அறங்காவலர் திரு குமணராசன் அவர்கள் தமிழ்த் தடம் என்கின்ற வலையொளித் தளத்தின் மூலமாக உலகிற்குச் சொல்லும் தமிழ் இலக்கியங்களைப்பற்றிய தொடர் உரைகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

துளி 28 – கார் நாற்பது

பதினென்கீழ்க் கணக்கு நூல்களில் நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு. அவை:
1.கார் நாற்பது,
2. களவழி நாற்பது
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
என்பனவாம்.

துளி 27 – இனியவை நாற்பது

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர் கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவது நூலாகும்..

துளி 26 – இன்னா நாற்பது

இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது.

துளி 25 – நாலடியார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 18 களில் 10 நூல்கள் புறம் சார்ந்தும் 6 நூல்கள் அகம் சார்ந்தும், மீதியுள்ள இரண்டு நூல்கள் திருக்குறள், நாலடியார் என்பவை அகம், புறம் சார்ந்தும் உள்ள நூற்களென ஏற்கனவே பதினெண் கீழ்க்கணக்கு அறிமுகப் பதிவில் விளம்பியுள்ளேன்

துளி 24 – திருக்குறள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக இன்று நாம் பார்க்க இருக்கும் இலக்கியம் முதன்மையான ஒன்றாகவும், உலக இலக்கியங்களில் ஒப்பற்ற நூலாகவும் திகழும் திருக்குறள்

துளி 23 – பதினென் கீழ்க்கணக்கு

தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் இருப்பினும் தொன்மைக் காலத்தில் (அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்) தோன்றிய 41 நூல்களை செவ்வியல் இலக்கியங்களாக வரையறுத்துள்ளனர்

துளி 22 – கூத்தராற்றுப் படை

பத்துப் பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் ஆகும்.
ஆற்றுப்படையிலக்கியம் என்பது தமிழ் மொழியில் மட்டும் தான் உள்ளது. வேறு எம்மொழியிலுமில்லை என்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

துளி 21 – பட்டினப்பாலை

பத்துப் பாட்டில் உள்ள மற்றுமொரு அகம் புறம் சார்ந்த இலக்கியம் பட்டினப் பாலை என்ற நூலாகும். இது காதல் துறைப் பற்றி அமைந்த ஓர் கற்பனைப் பாட்டு. இந்த நூலில் காதலர் பிரிவாகிய பாலைத் திணை என்னும் பொருள் பட பல பாடல்கள் அமைந்துள்ளன.

துளி 20 – குறிஞ்சிப் பாட்டு

இது ஒரு காதல் பாட்டு. ஆரிய அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழின் பெருமை உணர்த்த வேண்டி ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றது. இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு. அவ்வரசன் தமிழர்தம் காதல் ஒழுக்கத்தை அறிந்துகொள்ள, குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது

துளி 19 – நெடுநல்வாடை

நற்றமிழில் தோன்றிய இலக்கியச் செல்வங்கள் அளவிட முடியாதவை. அதில் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாக விளங்குவது “நெடுநல்வாடை” எனும் ஒப்பற்ற நூலாகும்

துளி 18 – மதுரைக் காஞ்சி

பத்துப் பாடல் தொகுப்பில் மிக நீண்ட இலக்கியம் மதுரைக் காஞ்சியாகும். பாண்டிய நாட்டின் தலைநகர் பழந்தமிழ் மதுரை குறித்தச் சிறப்புகளை இந்நூலில் காணலாம்.

துளி 17 – முல்லைப் பாட்டு

தமிழர் தம் பெரும் இலக்கியச் சுரங்கமான சங்க இலக்கியங்களில் பெருந்தொகுப்பாக விளங்குபவை எட்டுத் தொகை மற்றும் பத்துப் பாட்டு நூல்களாகும்.

துளி 16 – பெரும்பாணாற்றுப்படை

இன்று சுறவம் (தை) திங்கள் இரண்டாம் நாள் – உழைக்கும் தமிழர் அனைவரும் பொலிவுடன் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் நன்னாள்; இது உழவர் திருநாள் என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ் நாடு அரசு இந்நன்னாளை திருவள்ளுவர் நாள் எனவும் அறிவித்துள்ளது.

துளி 15

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என நிலம் திரிந்தாலும் மருத நிலத்தின் மாட்சியே உலக மக்களுக்கெல்லாம் உணவை வழங்கிய உழவுத் தொழிலாகும்.

துளி 14 – சிறுபாணாற்றுப்படை

சங்க இலக்கியத் தொகுப்பாக விளங்கும் பத்துப் பாட்டு வரிசையில் மூன்றாவதாக இடம் பெரும் நூல் சிறு பாணாற்றுப்படை ஆகும். ஆற்றுப் படை இலக்கியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்நூலாகும்.

துளி 13 – பொருநராற்றுப்படை

சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றான பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒளி முத்துகளாகத் திகழ்பவை ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆகும். அதில் இரண்டாவதாகத் திகழ்வது இன்று நாம் காணவிருக்கும் பொருநராற்றுப்படை.

துளி 12 – திருமுருகாற்றுப்படை

தமிழர்களின் பண்பாட்டையும் நாகரிக மேம்பாட்டையும் வாழ்வியல் ஒழுகலாறுகளையும் அறிந்து கொள்வதற்குரிய ஒரே அடையாளம் நமது சங்க இலக்கியங்கள் என ஏற்கனவே பகன்றுள்ளோம்.

துளி 11 – பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். எட்டுத்தொகை போலவே, பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றுண்டு

துளி 10 – புறநானூறு

உலகில் பெரும்பாலான மக்கள் தமிழின் தொன்மை மற்றும் அதன் சிறப்புக் குறித்துப் பேசும் போது முகாமையாகப் பயன் படுத்தும் ஓர் இலக்கியம் புறநானூறு ஆகும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற செய்யுள் வரிகள் பலராலும் அறியப் பட்ட ஒன்றே!

துளி 9 – அகநானூறு

அகநானூறு – எட்டுத் தொகை எனப்படும் சங்ககாலத் தொகுப்பில் உள்ள ஒரு அருமையான நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது

துளி 8 – கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலான கலித்தொகை சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்டவையாகும்.

துளி 7 – பரிபாடல்

சங்க கால தமிழ் இலக்கியத் தொகுதியான எட்டுத் தொகை நூல்களில் ஐந்தாவதாகச் சிறப்பித்துச் சொல்லப் படும் நூல் பரிபாடல் ஆகும்.

துளி 6 – பதிற்றுப் பத்து

பதிற்றுப்பத்து எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்து பத்தாகப் பாடியப் பாடல்களின் தொகுப்பு. முழுமையாகக் கிடைக்காத நூல்களில் இதுவும் ஒன்று.

துளி 5 – ஐங்குறு நூறு

சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் பெருமையாகப் போற்றப் படும் பிறிதொரு இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு.

துளி 4 – குறுந்தொகை

சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் பெருமையாகப் போற்றப் படும் ஓர் இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு

துளி 3 – நற்றிணை

சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் முதன்மையாக வைத்துப் போற்றப் படும் ஓர் இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு.

துளி 2 – தொல்காப்பியம்

தமிழ் மொழி, தமிழர் இனம் ஆகியவற்றின் பெருமை மிகு அடையாளமாக நமக்குக் கிட்டியிருக்கும் ஓர் அரிய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.

துளி 1 – முன்னுரை

தொல் தமிழர் வகுத்த ஐந்திணை ஒழுக்கத்தின் நானிலப் பரப்பின் முன்பனிக் குளிரில் காலை இளம்பருதியின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்த ஒரு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்காக யாம் பதிவிடுகின்றோம்

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives