01 Aug 2015 1:10 pm
மும்பையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனின் நினைவேந்தலையொட்டி இலெமுரியா அறக்கட்டளை சார்பில் மும்பையில் மறைந்த மூத்த தமிழ் முன்னோடிகளின் படத்திறப்பு, சிறப்புச் சொற்பொழிவு, நூல் வெளியீடு, மாணவர் விருதுகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் சயானில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாராட்டிய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொன்.அன்பழகன் ஐ.ஏ.எஸ். தலைமை தாங்கினார்.
இலெமுரியா அறக்கட்டளை நிறுவனரும் தலைவருமான சு.குமணராசன் வரவேற்று பேசினார். மருத்துவர் நானி சகானாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த.இராமலிங்கம் ஒழுக்கத்து நீத்தார் பெருமை’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
விழாவில் எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் படத்தை டாக்டர் அமுதகுமார், மும்பை திமுக முன்னாள் செயலாளர் த.மு.பொற்கோ படத்தை தாராவி திமுக செயலாளர் வே.ம.உத்தமன், நவிமும்பை தமிச் சங்க முன்னாள் தலைவர் கி.ராசகோபால் படத்தை நவிமும்பை தமிழ்ச்சங்க அறங்காவலர் குழு தலைவர் நா.மகாதேவன், திருவள்ளுவர் மன்ற தலைவராக இருந்த பி.ராசபாண்டியன் படத்தை கோவை தொழிலதிபர் அழகன் கருப்பண்ணன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த எஸ்.எஸ்.அன்பழகன் படத்தை பாம்பேலெதர் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் எஸ்.ஏ.துரை, புலவர் இரா. பே.பெருமாள் படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி செயலாளர் ஞான.அய்யாப்பிள்ளை, முன்னாள் புறநகர் திமுக அவைத்தலைவர் எஸ்.பி. முருகேசன் படத்தை பாரதி கல்வி கலாசார இயக்க செயலாளர் இராசேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் சீர்வரிசை சண்முகராசன் எழுதிய ‘‘வழித்திசைகள்’ என்ற நூலை கவிஞ்ர புதிய மாதவி வெளியிட விழித்தெழு இயக்கத்தை சேர்ந்த ஈசுவரி தங்கபாண்டியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முலுண்ட் வாணி வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணர் விக்னேஸ்வரனுக்கு திருவள்ளுவர் மாணவர் விருது – 2015, தாராவி கம்பன் உயர்நிலைபள்ளி மாணவி காயத்திரிக்கு தந்தை பெரியார் மாணவர் விருது – 2015, தலா ரூ.5000 பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை திருவள்ளுவர் பவுண்டேசன் முன்னாள் தலைவர் சிவ.நல்லசேகரன், மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் ஆகியோர் வழங்கினர்.
காவல்துறை முன்னாள் ஆணையர் தி.சிங்காரவேல், திருவள்ளுவர் மன்றச் செயலாளர் வி.தேவதாசன், ஆதி திராவிட மகாஜன சங்க தலைவர் கே.வி.அசோக் குமார், தருண்பாரத் இயக்க தலைவர் ராஜேந்திரன் சுவாமி, யாதவ மகாசபை தலைவர் ஈ.இலெட்சுமணன், சிவராசு லிண்டெட் நவிமும்பை தமிழ்ச்சங்கம் நா.மகாதேவன், வே சதானந்தன், கே.ஆர்.ஸ்ரீனிவாசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.பழனிச்சாமி உள்ளிட்டோர் நினைவுரை வழங்கினர். இறுதியில் மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
விழாவில் மும்பையைச் சேர்ந்த ஏராளமான தமிழ் பிரமுகர்கள், தமிழமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
We can not do it alone. Join with us.