05 Jan 2021 9:50 am
இலெமுரியா அறக்கட்டளையின் கொரானா கால மனிதநேயப் பணிகள் சிறப்பு மலர் – 2020 வெளியீட்டு விழா மும்பையில் மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசொசியேசன் கலையரங்கத்தில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
இலெமுரியா அறக்கட்டளையின் அறங்காவலர், திருமதி நங்கை குமணராசன் அவர்கள் வரவேற்புரை வழங்க, விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க, விழா இனிதே தொடங்கியது.
Click Here to View Image Gallery of the Functionகவிதாயினி புதிய மாதவி அவர்கள் தலைமையில் நடந்த இவ்விழாவில் திருமதி கனிமொழி அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மலரை வெளியிட்டார். முதல் மலர்களை வழக்கறிஞர் மஞ்சுளா கதிர்வேல் மற்றும் திருமதி சுமதி மதியழகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தூதுவர்கள் வாழ்த்துரைகள் வழங்கினர்.
திரு. அ. இரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். இலெமுரியா அறக்கட்டளையின் தலைவர் திரு. சு. குமணராசன் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
செய்தி தாள்: தினகரன்
பதிப்பு: மும்பை
நாள்: 05-01-2021
செய்தி தாள்: தின தந்தி
பதிப்பு: மும்பை
நாள்: 05-01-2021
செய்தி தாள்: வணக்கம் மும்பை
பதிப்பு: மும்பை
நாள்: 06-01-2021
செய்தி தாள்: தினமணி
பதிப்பு: பெங்களூரு
நாள்: 07-01-2021
செய்தி தாள்: விடுதலை
பதிப்பு: சென்னை
நாள்: 08-01-2021
We can not do it alone. Join with us.