24 Jul 2014 1:00 pm
கடந்த 23.07.2014 அன்று திடீர் மாரடைப்பால் இறப்பெய்திய மூத்த பத்திரிகையாளர் “சீர்வரிசை” இரா.மா.சண்முகராசனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி மும்பை, சயான்(கி), பாரதிய மியூசிக் அரங்கில் நடைபெற்றது.
சீர்வரிசை சண்முகராசனார் பல்லாண்டு காலம் திராவிட இயக்கத்தில் இருந்து பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்றவராவார். இவருடைய படத்திறப்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சண்முகராசனார் படத்தைத் திறந்து வைத்து நினைவுரையாற்றினார்.
இந்நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பம்பாய்த் திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளர் வி.தேவதாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று, தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் முகவுரை ஆற்றினார். சீர்வரிசையாரின் பேத்தி இலெமுரியாழ் தனது தாத்தா பற்றிய ஆங்கிலக் கவிதை ஒன்றை வாசித்தார். சீர்வரிசையாரின் நினைவுகளைப் போற்றிடும் வகையில், சீர்வரிசையாரின் நண்பர் கார்வாரே கணேசன், இந்தியப் பேனா நண்பர் பேரவைத் தலைவர் கருண், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஞான அய்யாபிள்ளை, மும்பை அ.தி.மு.கவைச் சேர்ந்த எஸ்.ரவீந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோ.மா.விசுவநாதன், கவிஞர் புதிய மாதவி, வெ.பாலு, காம்ளே, கவிஞர் மு.தருமராசன், பெரம்பலூர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வெ.சித்தார்த்தன், மும்பை புறநகர் தி.மு.கவைச் சேர்ந்த கொ.வள்ளுவன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.ரவிச் சந்திரன், உல்லாசுநகர் திருவள்ளுவர் மன்றம் சம்பத், பெரியார் விருதாளர் பொ.அப்பாதுரை, வழக்குரைஞர் இராசாமணி, சிங்கார வேலு இ.ஆ.ப (பணி நிறைவு), பேராசிரியர் சமீரா மீரான், கவிஞர் வதிலை பிரதாபன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீ.குமரேசன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக சீர்வரிசை சண்முகராசனின் இளவல் பூபாலன் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.
மராத்திய மாநில தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (MIDC) இணைத் தலைவர் பொன்.அன்பழகன், இ.ஆ.ப நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். மேலும் ஆதி திராவிடர் சங்கத் தலைவர் கே.வி.அசோக் குமார், பா.ச.கவைச் சேர்ந்த இராசா உடையார், டி.கே.சந்திரன், இராச மாணிக்கம், அ.கணேசன், ஜான் சாமுவேல், வே.உத்தமன், மா.ஜேசுராசு, வேலுமயில் ஆகியோரும் பம்பாய் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், தமிழ் எழுத்தாளர் மன்றம், விழித்தெழு இயக்கம், மும்பைத் தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பல சமூக அமைப்புகளும் அரசியல் கட்சி பொறுப்பாளர்களும் ஏராளமான சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு தங்கள் இரங்கலைப் பதிவு செய்தனர்.
We can not do it alone. Join with us.