01 Jun 2013 12:50 pm
மும்பை மாட்டுங்காவில் உள்ள மைசூர் அசோசியேசன் அரங்கில் இலெமுரியா அறக்கட்டளை அறிமுக விழா மற்றும் 3 தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா ஆகியவை 05.01.2013 அன்று நடைபெற்றது. விழாவிற்கு கோடக் மகேந்திரா வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் மலர் அரசன் தலைமை தாங்கினார். குமணராசன் வரவேற்றுப் பேசினார். கவிஞர் செல்வராசன், பழனிச்சாமி, வக்கீல்கள் ராசாமணி, சின்னபாண்டியன், சிவ நல்லசேகரன், வின்சென்ட்பால், முத்தமிழ் தண்டபாணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் சிங்காரவேல் கலந்து கொண்டு இலெமுரியா அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து குமணராசன், தருமராசன், நங்கை ஆகியோர் எழுதிய மும்பை தமிழர் வரலாற்றில் ‘மறந்து போன நினைவுகள், சிந்தனைச் சுவைகள், துணை எழுத்து ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டது. நூல்களின் முதல் பிரதியை பொ.அப்பாதுரை, சந்திரன், பாலப்பன் முருகன், தேவராசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கவிஞர் தருமராசன் ஏற்புரை ஆற்றினார். விழாவில் ராசகோபால், சீர்வரிசை சண்முகராசன், கே.வி.அசோக்குமார், அலிசேக் மீரான், ரவீந்திரன், கவிதாளினி புதியமாதவி, ஞான அய்யாப்பிள்ளை, சமீராமீரான், நெல்லைவளவன், பிச்சுமணி, ராதாகிருஷ்ணன், ஜமாலுதீன், நாடோடித் தமிழன், சித்தார்த்தன், கணேசன், நெல்லை வசந்தன் குமார், வான்மதி, முகவை திருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். முடிவில் கணேசன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை இலெமுரியா அறக்கட்டளை மற்றும் தமிழ் அலை பதிப்பகம் ஆகியவை இணைந்து செய்திருந்தன.
We can not do it alone. Join with us.