இலெமுரியா அறக்கட்டளை முப்பெரும் விழா – 2017

01 Aug 2017 1:20 pm

இலெமுரியா அறக்கட்டளை முப்பெரும் விழா – 2017 Alt

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சேது சொக்கலிங்கம், அன்பழகன் பங்கேற்பு
இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் நினைவை போற்றும் விதமாக மாணவர்களுக்கு விருதுகள், நூல்கள் வெளியீடு தமிழர் கலை பண்பாட்டு நிகழ்வுகள் என முப்பெரும் விழாவாக சிவாஜி பார்க்கில் உள்ள வீர் சாவர்க்கர் அரங்கில் வெகு விமரிசையாக நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சேது சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை விருந்தினராக அறிவியல் அறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாத்துரை பங்கேற்றார். பம்பாய் திருவள்ளுவர் மன்ற நிறுவனர் தேவதாசன், மராட்டிய மாநில தமிழ்ச்சங்க தலைவர் அண்ணாமலை, தருண்பாரத் சேவா சங்க நிறுவனர் ராசேந்திரன் சுவாமி, ராமச்சந்திரன், சுவாமிப்பிள்ளை, சுங்கவரித்துறை துணை ஆணையர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் இலெமுரியா அறக்கட்டளை தலைவர் சு.குமணராசன் வரவேற்றுப் பேசினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு நடந்த மண்டபத்திற்கு வெளியே தமிழர் விழுமியங்களை சிறீதர் தமிழன் காட்சிப்படுத்தியிருந்தது அனைவரையும் ஈர்த்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக நெல்லை பைந்தமிழ் இயக்கத்தில் தமிழர் இயல், இசை, கூத்தரங்கம் வெகு சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக விவசாயி படும் இன்னல்களை காட்சிப்படுத்தியிருந்தது வெகு சிறப்பாக இருந்தது.

அதனை தொடர்ந்து செல்வி பவித்ராவின் பரத நாட்டியம் சிறப்புடன் நடந்தது. நிகழ்ச்சியினை பெ.கணேசன் நெறியாண்டார். சு.சுதாகரன் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளான ‘அய்யன் திருவள்ளுவர் மாணவர் விருது’, ‘தந்தை பெரியார் மாணவர் விருது’, ‘பெருந்தலைவர் காமராசர் மாணவர் விருது’, ‘புரட்சியாளர் அம்பேத்கர் மாணவர் விருது’, ‘அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் மாணவர் விருது’ என முறையே செல்வி. அமிசா அரசன், செல்வி அமிசா சித்தன், செல்வி விசயலட்சுமி மோகன், செல்வி அமராவதி அர்ஜூன் மற்றும் செல்வி தீபா அண்ணாதுரை ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தமிழில் கல்வி கற்று நன்மதிப்பெண்&புலமையும் பெற்ற மாணவர்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டது. முத்தமிழாசிரியர் புலவர் பாலையாவிற்கு தொல்காப்பியர் விருதும் வழங்கப்பட்டது. அமலா ஸ்டான்லி, புதிய மாதவி, செலின் ஜேக்கப், தேவசெல்வி சாமுவேல் ஆகியோர் விருதுகள், பொற்கிழிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினர்.

கலால் வரித்துறை சு.கி.விமலநாதன், மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் இரா.தமிழ்ச்செல்வன், பேராசிரியை மீனாட்சி வெங்கடேசன், வருமான வரித்துறை இணை ஆணையர் முனைவர் சு.பாண்டியன், தமிழர் பாசனை ஆ.பி.சுரேசு, மெட்டல் பிரைவேட் லிமிட்டெட் இயக்குனர் அழகன் கருப்பண்ணன், இதழாளர் முத்துமணி நன்னன், மாநகராட்சி தமிழாசிரியர்கள் குழுமத் தலைவர் அனிதா டேவிட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அடுத்து தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசனின் உலகை அறிவோம், செய்நன்விதைகள், ஃபிப்த் பில்லர் என்ற மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

கூடுதல் காவல்துறை தலைவர் ச.ஜெகன்நாதன், மகாராட்டிரா மாசுகட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த பொன்.அன்பழகன், பொருளாதார நிபுணர் சேதுராமன் சாத்தப்பன் நூல்களை வெளியிட்டனர். மேலும் சிங்காரவேலு ஐபிஎஸ், அம்பிகா ஐபிஎஸ், ஆ.டென்சிங், அந்தோணிராஜ், மு.மாரியப்பன், கராத்தே முருகன், செ.அங்கப்பன், டி.கே.சந்திரன், கவிஞர் குணா, அ.இரவிச்சந்திரன், ம.சேசுராசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிகரமாக அறிவியலறிஞர் முனைவர் மயில்சாமி அண்ணாத்துரை தமது உரையில் தமிழர்கள் தமது தாய்மொழியின் அவசியத்தை, அருமையை புரிந்திட வேண்டும் என்றார். முடிவாக நங்கை குமணராசன் நன்றியுரைடன் விழா இனிதே நிறைவுற்றது.

Tags:

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives