27 Jul 2016 1:15 pm
இலெமுரியா அறக்கட்டளை சார்பாக, சீர்வரிசை சண்முகராசனார் நினைவு இலக்கியச் சொற்பொழிவு, மாணவர் விருதுகள், நூல்கள் வெளியீடு என முப்பெரும் விழா மும்பை சயான், பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் நடைபெற்றது.
முப்பெரும் விழா தொடக்கத்தில் ‘‘இலெமுரியா அறக்கட்டளை’’ நிறுவனரும் தலைவருமான சு.குமணராசன் வரவேற்புரையாற்றினார். மகாராஷ்டிரா மாநில பதிவுத்துறை பதிவாளரும் முத்திரைத்தாள் ஆணையருமான டாக்ட்ர ந.இராமசாமி ஐ.ஏ.எஸ். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
விழாவில் பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் வி.தேவதாசன், ஆதிதிராவிடர் நலச்சங்கத் தலைவர். க.வ. அசோக்குமார், பொற்கோ அன்பழகன், நவிமும்¬ப் தமிழ்ச்சங்கத் தலைவர் ந.மகாதேவன், தமிழர் நலக்கூட்டமைப்பு அமைப்ளர் கராத்தே முருகன், மும்பைத் திமுக. செயலாளர் வே.ம.உத்தமன் மும்பை தமிழின இரயில் பயணிகள் சங்கப் ªருளாளர் க.நா.சாரங்கபாணி, கி.தனுஷ்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு திரையிசைப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு ஆற்றினார்.
மறைந்த முதுபெரும் எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனார் நினைவாக இவ்வாண்டுக்கான ‘‘திருவள்ளுவர் விருது’’ சயான், பீப்பிள் வெல்ஃபேர் உயர்நிலைப்பள்ளி மாணவி செல்வி பவானி குணாளனுக்கும், ‘‘தந்தை பெரியார் விருது’’ பாண்டூப் பிரைட் உயர்நிலைப்பள்ளி மாணவி செல்வி அ.சேசு சந்தியாவுக்கும், ‘‘பெருந்தலைவர் காமராசர் விருது’’ மலாடு, நேல்மணி நகராட்சிப் பள்ளி மாணவி செல்வி நீலா கண்ணனுக்கும் விருதுகள், பொற்கிழிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப் பெற்றனர். மேலும் இவ்வாண்டில் மற்றுமொரு சிறப்பு விருதான ‘‘ டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் விருது’’ தாராவி, பி.எஸ்.ஐ.ஏ.எஸ். உயர்நிலைப்பள்ளி மாணவி செல்வி இலட்சுமி பிரியாவுக்கு வழங்கப்பட்டது.
மங்கத்ராம் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சு.இராமச்சந்திரன், கவிஞர் புதிய மாதவி, சாய் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ந.சபேசன் ஆகியோர் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
மறைந்த புலவர் இரா.பே.பெருமாள் அவர்களின் ‘‘கனிச்சாறு’’, சு.குமணராசனின் ‘‘பனித்துளியின் நுனித்துளிகள்’’, உலகை மாற்றிய சொல்வெட்டுகள், கோரா&தராவின் ‘‘நடை உடை பாவனை’’ ஆகிய நூல்களை முறையே புலவர் பாலையா, தொழிலதிபர் ஆ.டென்சிங், கவிஞர் வதிலை பிரதாபன், ம்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட இந்நூல்களின் முதல் படியினை தமிழர் நலக்கூட்டமைப்பு அமைப்பாளர் எஸ்.இராஜேந்தி சுவாமி, சாலமன் ஞான அய்யாப்பிள்ளை, டி.கே.சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மூத்த எழுத்தாளர் திருமதி சாரதா சீனிவாசன், கல்லூரி முதல்வர் திருமதி அமலா ஸ்டான்லி, மாநகராட்சி தமிழ் ஆசிரியர் குழுமத் தலைவர் திருமதி அனிதா டேவிட் ஆகியோர் நூல்களுக்கான அறிமுக உரையும் பாராட்டுரையும் வழங்கினர். சென்னை சோக இகேதா பெண்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் சேது குமணன், மும்பை திராவிர் கழகத் தலைவர் பெ.கணேசன், இந்திய பேனா நண்பர் பேரவை தலைவர் மா.கருண், இராஜா இளங்கோ, அ.கணேசன், ஆறுமுக பெருமாள், டாக்டர் பெருமாள், நெல்லை பைந்தமிழ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
We can not do it alone. Join with us.