2021 ஆம் ஆண்டுக்கான சிலம்பொலி செல்லப்பனார் சிறப்பு விருது
சிலம்பு நம்பி முனைவர் யுவராச அமிழ்தன் தலைவர், அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம், சென்னை
வாழ்த்துரை
திருமிகு இரா. செல்வம் இ.ஆ.ப., செயல் இயக்குநர், தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழகம், இந்திய அரசு
முனைவர் சு. பாண்டியன் இ.வ.ப., கூடுதல் ஆணையர், வருமான வரித்துறை, சென்னை
முனைவர் சேது குமணன், தலைவர், சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்று ஆராய்ச்சி மையம், காரைக்குடி & சேது பாஸ்கரா கல்விக் குழுமம், சென்னை
திருமதி புனிதா கணேசன், தலைவர் பாரத் கல்விக் குழுமம், தஞ்சாவூர்
கமாண்டன்ட் நா. சோமசுந்தரம், கடலோரப் பாதுகாப்புப் படை (கிழக்குப்பகுதி)
பேராசிரியர் கு. வணங்காமுடி, வடதமிழக ஒருங்கிணைப்பாளர், தமிழியக்கம்
நெறியாள்கை
முத்துமணி நன்னன்
நன்றியுரை
புலவர் கார்த்தியாயினி, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு
இலெமுரியா அறக்கட்டளை, மும்பை
இலெமுரியா அறக்கட்டளை மகாராட்டிரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஓர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். மகாராட்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் வாழ் நலிந்த பிரிவு மக்களின் கல்வி வளர்ச்சி, மருத்துவம், மாற்றுத்திறனாளிகளின் ஊக்கம், பெண்ணுரிமை, தாய்மொழிக்கல்வியின் தேவை என பல்துறைகளில் தொடர்ந்து தொய்வின்றி சமூகப் பணியாற்றுவதுடன் மக்களிடையே சமூக ஈடுபாட்டையும் சமனியச் சிந்தனைகளையும் வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகின்றது. கொரானா பெருந் தொற்றுக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணி அகற்றியும், மருத்துவ உதவிகள் புரிந்தும் பெருந் தொற்றிலிருந்து மக்களின் உயிர்க்காப்புச் சேவையும் செய்து உலக அளவில் பாராட்டைப் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்குச் சேவையாற்றும் அறிஞர் பெருமக்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் விருதுகள், பொற்கிழிகள் வழங்கி இளைய தலைமுறையினரையும் ஊக்கப்படுத்தி வருவது இதன் சிறப்பாகும்.
தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு
உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழ் மக்களுக்குத் தாய்மொழி உணர்வை மேம்படுத்தும் வகையில் தமிழைக்கற்பிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஆகும். தமிழர் நாகரிகம், பண்பாட்டு விடயங்களை இளையத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தமிழைக் கொண்டாடுவோம் நிகழ்வையும் நடத்தி வருகின்றது. கடந்தா ஓராண்டு கால அளவையில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், கீழ்த் திசை நாடுகள், இந்திய மாநிலங்கள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேலான தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொடுத்த சாதனையுடன் தொடர்ந்து தொய்வின்றி தொண்டாற்றி வருகின்றது.