இலெமுரியா அறக்கட்டளையின் அறங்காவலர் திரு குமணராசன் அவர்கள் தமிழ்த் தடம் என்கின்ற வலையொளித் தளத்தின் மூலமாக உலகிற்குச் சொல்லும் தமிழ் இலக்கியங்களைப்பற்றிய தொடர் உரைகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
அகநானூறு - எட்டுத் தொகை எனப்படும் சங்ககாலத் தொகுப்பில் உள்ள ஒரு அருமையான நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது