இலெமுரியா அறக்கட்டளையின் அறங்காவலர் திரு குமணராசன் அவர்கள் தமிழ்த் தடம் என்கின்ற வலையொளித் தளத்தின் மூலமாக உலகிற்குச் சொல்லும் தமிழ் இலக்கியங்களைப்பற்றிய தொடர் உரைகளை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.
பத்துப் பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் ஆகும். ஆற்றுப்படையிலக்கியம் என்பது தமிழ் மொழியில் மட்டும் தான் உள்ளது. வேறு எம்மொழியிலுமில்லை என்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.